மக்களவை தேர்தல் 2019: இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்கள் !

மக்களவை தேர்தல் 2019: இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்கள் !
மக்களவை தேர்தல் 2019: இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்கள் !

தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட நாடாளுமன்றத்தேர்தல் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி 91 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் 18 மாநிலங்களிலும் 2 யூனியன் பிரதேசங்கலிலும் நடைபெற்றது.

இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 95 தொகுதிகளில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டத் தேர்தல் அசாம், பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிஸா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், வங்காளம்,சத்தீஸ்கர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறுகிறது. 

இரண்டாம் கட்டத் தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மதுரையில் மட்டும் அழகர் திருவிழா நடைபெறுவதால் வாக்களிக்கும் நேரம் சற்று அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நாளை 39 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்கிறது. மிக முக்கியமான மாநிலங்களான உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும் மேற்கு வங்கத்தில் மொத்தம் 3 தொகுதிகளிலும் கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும் பெங்களூரில் நான்கு தொகுதிகளிலும் தேர்தல் நடக்க உள்ளது. 

7 கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல்29, மே 6, மே 12 மற்றும் மே 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் மே 23  அன்று வெளியிடப்படும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com