டிரெண்டிங்
மார்ச் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பு
மார்ச் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பு
தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால், வரும் மார்ச் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தொகுதி மறுவரையறைக்கான இறுதிகட்டப் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 2011 மக்கள் கணக்கெடுப்பின் படி மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறை தொடர்பாக மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. மக்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான காலக்கெடு வரும் வெள்ளிக்கிழமை வரை அளிக்கப்பட்டுள்ளது. இறுதி செய்யப்பட்ட அறிக்கையை இம்மாத இறுதிக்குள் தமிழக அரசிடம் மாநில தேர்தல் ஆணையம் சமர்ப்பிக்கவுள்ளது. அதன் பின்னர் தொகுதி மறுவரைறை தொடர்பான அறிப்பை அடுத்த மாதம் அரசு அறிவிக்கவுள்ளது. இதனால் மார்ச் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

