tvk vijays campaign rally starts
விஜய்எக்ஸ் தளம்

திருச்சிக்கு வந்த விஜய்.. தொண்டர்கள் உற்சாகம்!

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்குவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று திருச்சி வந்தடைந்தார். அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.y

"நாங்கள் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டவில்லை"-ராஜ்மோகன்

மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி திமுக இல்லை என்றும் திமுக என்னும் இரும்புக்கோட்டையை எந்த கொம்பனாலும் தொடமுடியாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் வெளியிட்டிருக்கும் நிலையில், அதற்கு பதிலளித்துள்ள தவெக கொள்கை பரப்புச்செயலாளர் ராஜ்மோகன், “எஃகு கோட்டையோ, இரும்புக் கோட்டையோ, மலைக் கோட்டையோ... அந்தக் கோட்டையில் ஓட்டை போடுவதில் எங்கள் தலைவர் விஜய் ஸ்பெஷலிஸ்ட்; நாங்கள் பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டவில்லை; இது, தன் எழுச்சியாக வரும் கூட்டம்” என தெரிவித்துள்ளார்.

''விஜயோட இந்த கூட்டத்தைப் பார்த்து நிறைய பேர் பொறாமைப்படுவாங்க''- டி.என்.ரகு

முதல் தேர்தல் பரப்புரையில் தவெக தலைவர் விஜய் 

தேர்தல் பரப்புரையை தொடங்கிய தவெக தலைவர் விஜய்க்கு ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் வருகை தாமதமாவதால் கலைந்து செல்லும் தொண்டர்கள்

திருச்சி கூட்ட நெரிசலில் சிக்கி தொண்டர்கள் 6 மயக்கமடைந்த நிலையில், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

"2026-ல் விஜய் தான் முதலமைச்சர்!" - மகளிர் அணி பேட்டி

காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் வீடுகள் மீது ஏறும் தவெக தொண்டர்கள்

தொண்டர்கள் கூட்டத்தில் ஊர்ந்து செல்லும் விஜயின் வாகனம்

விஜயை பின்தொடர்ந்த தொண்டர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறை

தவெக தலைவர் விஜய்க்கு திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை முன் 10.30 முதல் 11.00 மணிவரை உரையாற்ற அனுமதியளிக்கப்பட்டிருந்தது.  தொண்டர்கள் கூட்டத்தால் குறித்த நேரத்துக்கு விஜய் பரப்புரை நடக்கும் இடத்துக்கு செல்ல முடியாத நிலையில், அனுமதியளிக்கப்பட்ட நேரத்தை கடந்து பரப்புரை செய்தால் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பு.

விஜயை பார்க்க தொண்டர்கள் குவிந்ததால் குறித்த நேரத்தில் பரப்புரை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜயின் பரப்புரை வாகனம் திருச்சி விமான நிலையத்தைவிட்டு நகர முடியாத அளவுக்கு சூழ்ந்த தொண்டர்கள்

தேர்தல் பரப்புரை வாகனத்தில் தவெக தலைவர் விஜய்

விஜயை வரவேற்க திருச்சி விமான நிலையத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்

விஜயை விமான நிலையத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளனர்
விஜயை விமான நிலையத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளனர்pt web

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்குவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று திருச்சி வந்தடைந்தார். அவரை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்

திருச்சி வந்தடைந்தார்
திருச்சி வந்தடைந்தார்pt web
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com