Live Update
Live Updateபுதிய தலைமுறை

புதிய தலைமுறை Live Updates - November 11, 2025

Live Updates - November 11, 2025

#JUSTIN | 2026 பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு நாளை தொடங்குகிறது - தெற்கு ரயில்வே

Pongal2026
Pongal2026

#JUSTIN | தமிழகத்தின் அடையாளமே மாறிப் போய் விட்டது - மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

LMurugan
LMurugan

வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இந்திய பெண்கள்...

 போலி வாக்காளர்களை காப்பாற்ற முயற்சியா?: நயினார் 

போலி வாக்காளர்களை காப்பாற்ற முயற்சியா?: நயினார்
போலி வாக்காளர்களை காப்பாற்ற முயற்சியா?: நயினார்

சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாக தமிழகம் மாறியிருக்கிறது - அண்ணாமலை

#BREAKING | போதிய அவகாசம் இல்லை - உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வாதம்

பிஹார் வாக்குப்பதிவு - பிற்பகல் 3 மணி நிலவரம்!

#JUSTIN | டெல்லி கார் வெடிப்பு - என்.ஐ.ஏ. விசாரணை

அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள்: நயினார் 

அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள்: நயினார்
அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள்: நயினார்

S.I.R பணிகள் - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

அரசு கொடுத்த வாக்குறுதி... புதுக்கோட்டை மக்களுக்கு குட்நியூஸ் சொன்ன துரை வைகோ....!

பிசானத்தூர் கிராமத்தில் மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கான உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைய வாய்ப்பில்லை என திருச்சி எம்.பி. துரை வைகோ உறுதியளித்துள்ளார்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள பிசானத்தூர் கிராமத்தில், சுற்றியுள்ள எட்டு மாவட்டங்களிலிருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை ஒரே இடத்தில் பாதுகாப்பாக அழிப்பதற்காக, உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை தனியாரால் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களது அறவழிப் போராட்டம் குறித்து கேள்விப்பட்ட திருச்சி எம்.பி. துரை வைகோ கடந்த 22ம் தேதி அந்த கிராம மக்களை நேரில் சந்தித்து தனது முழு ஆதரவைத் தெரிவித்தார்.

அத்துடன் பிசானூர் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படாமல் இருக்க அப்பகுதி எம்.பி. என்ற முறையில் உரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தார். அப்போது ஆட்சியரும் மக்களின் விருப்பம் இல்லாமல் அங்கு ஆலை அமைக்கப்படாது என உறுதியளித்தார்.

அடுத்ததாக நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்து உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பிசானத்தூர் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாகவும், அதனால் என்னென்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் பசுமை கிராமமாக குடியரசுத் தலைவர் விருது பெற்ற இந்த அழகிய கிராமத்தின் சுற்றுச்சூழல், விவசாயம், நீராதாரங்கள், மக்களின் உடல்நலம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வலியுறுத்தினார்.

இதனை கேட்டறிந்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு தொழிற்சாலை அமைப்பதற்கு முன் Consent to Establish (CTE) அனுமதியையும், கட்டுமானம் முடித்து அந்தத் தொழிற்சாலை தனது செயல்பாட்டைத் தொடங்குவதற்கு முன் Consent to Operate (CTO) அனுமதியையும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெறவேண்டும் என்றும், பிசானத்தூர் கிராமத்தில், உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை (Bio-Medical Waste Unit) அமைக்க முதற்கட்ட Consent to Establish (CTE) அனுமதி மறுக்கப்படும் உறுதியளித்தார். அதாவது, பிசானத்தூர் கிராமத்தில் இந்த உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை இனி அமைவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை துரை வைகோவிடம் தங்கம் தென்னரசு உறுதிபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள துரை வைகோ, புதுக்கோட்டை மாவட்ட, பிசானத்தூர் கிராம மக்களுக்கு, அவர்களின் ஒற்றுமைக்கு, அவர்களின் அறவழி போராட்டத்திற்கு, அவர்களின் நம்பிக்கைக்கு கிடைத்த மாபெரும் வாழ்வாதார வரலாற்று வெற்றியாக கருதுவதாக பதிவிட்டுள்ளார். இந்த நிலையை உருவாக்கித்தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

1991ம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட TATA SIERRA காரை மீண்டும் வெளியிடுகிறது டாடா நிறுவனம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com