அரசு வேலையை எதிர்நோக்கி தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமாகக் காத்திருந்த TNPSC GROUP 4 தேர்வுகள் வருகின்ற 12.07.2025 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
தேர்வு அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும், அந்தத் தேர்வு நடத்தப்படும் தேதி சனிக்கிழமையில் வருவதால் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
மத்திய அரசின் தேர்வு பண்டிகை காலங்களில் அறிவிக்கப்படுகிற போது திமுகவினரும் இடதுசாரிகளும் எதிர்ப்பதும்... பல்வேறு மாநில நிலவரங்களைக் கருத்தில் கொண்டு அந்த தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டிருந்தாலும் எழுந்த எதிர்ப்புக்கு மதிப்பளித்துத் தேர்வு தேதி மாற்றப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வருகிற ஜூலை 12 சனிக்கிழமையில் நடத்த இருக்கிற தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என லட்சக்கணக்கான இளைஞர்கள் சார்பில் அரசை வலியுறுத்துகிறேன் என பாஜக மாநிலச் செயலாளர் SG சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.