திருப்புவனத்தில் காவலாளி அஜித் குமாரை காவலர்கள் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது குறித்து தி.நகர் பாஜக மாநில செயலாளர் டாக்டர் எஸ்.ஜி. சூர்யா, இவ்வளவு கொடூரமாக தாக்கியுள்ள காவலர்கள் நிச்சயமாக மனச்சிதைவு நோய்க்கு ஆளானவர்களாக இருக்கலாம். காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஒழுங்காக பின்பற்றியிருந்தால், அஜித் குமாருக்கும் இந்நிலை ஏற்பட்டிருக்காது.
விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு தள்ளியாகி விட்டது என்று இருந்து விடாமல், ஐந்தாவது காவல் ஆணையத்தின் அறிக்கையை முதலமைச்சர் அவர்கள் மறுபடியும் படித்துப் பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் காவல்துறையின் கடை நிலை காவலர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்.
இது காவல்துறைக்கு மட்டுமல்ல, அஜித் குமார்களை உள்ளடக்கிய இந்த சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.