வெளியானது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

வெளியானது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

வெளியானது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
Published on

தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையில் 10 மக்களவை தொகுதிகளில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சி சிவகங்கை தவிர மற்ற 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட தொடங்கிவிட்டன. 

இந்நிலையில் திமுக தலைமையில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தனி தொகுதியான திருவள்ளூரில் கே.ஜெயக்குமார், கிருஷ்ணகிரியில் ஏ.செல்லகுமார், ஆரணியில் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோர் போட்டியிட உள்ளனர். கரூர் மக்களவை தொகுதியில் ஜோதிமணி, திருச்சியில் திருநாவுக்கரசர், தேனியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விருதுநகரில் மாணிக் தாகூர் ஆகியோர் களம் காண்கின்றனர்.

கன்னியாகுமரி தொகுதியில் ஹெச்.வசந்தகுமார் போட்டியிட உள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்படி காங்கிரசுக்கு மொத்தம் ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் சிவகங்கை தவிர ஒன்பது தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

திருவள்ளூர் - கே.ஜெயக்குமார்

கிருஷ்ணகிரி - ஏ.செல்லகுமார்

ஆரணி - எம்.கே.விஷ்ணுபிரசாத்

கரூர் - ஜோதிமணி

திருச்சி - திருநாவுக்கரசர்

தேனி - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

விருதுநகர் - மாணிக் தாகூர்

கன்னியாகுமரி - ஹெச்.வசந்தகுமார்

புதுச்சேரி - வைத்திலிங்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com