வனச் சுற்றுலா சென்ற குடும்பத்துக்கு சிங்கம் கொடுத்த அதிர்ச்சி !

வனச் சுற்றுலா சென்ற குடும்பத்துக்கு சிங்கம் கொடுத்த அதிர்ச்சி !

வனச் சுற்றுலா சென்ற குடும்பத்துக்கு சிங்கம் கொடுத்த அதிர்ச்சி !
Published on

தென்னாப்பிரிக்கா காட்டிற்குள் சுற்றுலா சென்ற குடும்பத்திற்கு, சிங்கம் ஒன்று அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை இந்திய வனத்துறை (ஐ.எஃப்.எஸ்) அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், "பெண் சிங்கம் ஒரு சுற்றுலா செல்ல விரும்புகிறது. அது கதவைத் திறந்து லிப்ட் கேட்கிறது. இது உங்கள் அடுத்த சஃபாரியில் நிகழலாம். காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்கவும்" என தெரிவித்துள்ளார்.

வீடியோவில், ஒரு குடும்பம் தூரத்திலிருந்து சிங்கங்களின் குழுவைக் காரிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆர்வமுள்ள ஒரு சிங்கம் சஃபாரி வாகனம் வரை நடந்து அதன் கதவைத் திறந்து, உள்ளே இருந்த சுற்றுலாப் பயணிகளைப் பயமுறுத்தியது.

இந்தப் பழைய வீடியோ நந்தா பகிர்ந்ததை தொடர்ந்து மீண்டும் வைரலாகி வருகிறது. இது 15,400 க்கும் மேற்பட்ட பார்வைகளை சேகரித்துள்ளது. வீடியோவைக் கண்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர், அடுத்து என்ன நடந்தது என்று அறிய ஆர்வமாக இருந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் கதவை இழுத்து மூடினர். சிங்கத்தால் காரின் கதவை திறக்க முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என வீடியோவில் ஒரு பெண் அலறுவதை கேட்க முடிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com