\
"எனக்கு கல்யாணம் மறக்காம வந்துருங்க!" - காமெடியாக பேசி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

"எனக்கு கல்யாணம் மறக்காம வந்துருங்க!" - காமெடியாக பேசி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

"எனக்கு கல்யாணம் மறக்காம வந்துருங்க!" - காமெடியாக பேசி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
Published on

நாளைக்கு எனக்கு திருமணம் மறக்காமல் வந்து விடுங்கள் என திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி ருசிகரமாக பேசி கரூரில் வாக்கு சேகரித்தார்.

கரூர் தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர், வாங்கல், குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசுகையில்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களுக்கான இலவச பயணம், மகளிருக்கான ஊக்கத்தொகை உள்ளிட்டவைகளை கூறி வாக்கு சேகரித்தார். செந்தில்பாலாஜி முத்தாய்ப்பாக பேசியது அனைவரையும் கவர்ந்தது.

உங்களிடம் வாக்கு கேட்பது என்பது நாளைக்கு எனக்கு திருமணம் கண்டிப்பாக வந்து விடுங்கள் என்று பத்திரிகை வைப்பதுபோல உள்ளது. நான் உங்கள் வீட்டு பையன் எனக்கு வாக்களியுங்கள் என பேசி அனைவரையும் கவர்ந்தது. இதனால் கூட்டத்தில் சிரிப்பொலி நிலவியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com