நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் சுவாரஸ்ய நிகழ்வுகள் - தொகுப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் சுவாரஸ்ய நிகழ்வுகள் - தொகுப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் சுவாரஸ்ய நிகழ்வுகள் - தொகுப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் சுவாரஸ்ய நிகழ்வுகள் சிலவற்றை தொகுப்பாக பார்க்கலாம்.

மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் வாக்களித்த ஆசிரியர்


விருதுநகர் சேலம் மாவட்டம் எடப்பாடியில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் வாக்களித்தார். 22ஆவது வார்டு பகுதியை சேர்ந்த கந்தவேல் என்பவர் நெற்றியில் விபூதியும், கழுத்தில் சிலுவையும், தலையில் தொப்பியும் அணிந்தவாறு வாக்கு மையத்திற்குச் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.



முதல்முறையாக தேர்தலில் வாக்களித்த மலைவாழ் மக்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை திருமூர்த்திமலை உள்ளிட்ட மலைகிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள், உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்க வாக்குரிமை அளிக்க வேண்டுமென நீண்டகாலமாக கோரி வந்தனர். அதை ஏற்று, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதையடுத்து, தளி பேரூராட்சியின் 16 ஆவது வார்டு திருமூர்த்திமலை வாக்காளர்களுக்கும் 17 ஆவது வார்டு குருமலை வாக்காளர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மலைவாழ்மக்கள் முதல்முறையாக வாக்களித்து, தங்கள் நீண்ட கால கனவை நிறைவேற்றினர்.

பாரம்பரிய உடையணிந்து வாக்களித்த பழங்குடியின மக்கள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சியில் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து வாக்களித்தனர். டன்சேண்டல், தோடர்மந்த் போன்ற பகுதியில் வசிக்கும் தோடர் மற்றும் படுகர் இன மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினர். இதே போன்று, கூடலூர் மற்றும் பந்தலூரில் பழங்குடியின மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

இளைஞர்களை விட முதியோர் வாக்களிக்க ஆர்வம் காட்டினர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி, அரியப்பம்பாளையம் மற்றும் கே.என்.பாளையம் பேரூராட்சிகளில் இளைஞர்களை விட முதியோர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். நடக்க முடியாத முதியோர்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டு, மூன்று சக்கர சைக்கிளில் சென்று வாக்களித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

குதிரை வண்டியில் சென்று வாக்களித்த வாக்காளர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வாக்காளர் ஒருவர் குதிரை வண்டியில் சென்று வாக்களித்தார். பெரிய தெருவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் பழைய தேவாங்கர் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையத்திற்கு தன்னுடைய குதிரை வண்டியில் சென்றார். வேறு வாகனங்கள் இல்லாததால் குதிரை வண்டியில் வந்ததாக ராமலிங்கம் தெரிவித்தார்.

இதையும் படிக்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60.70% வாக்குப்பதிவு - மாநில தேர்தல் ஆணையம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com