2017 தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கற்ற பாடம் - புதிய வியூகம் பலிக்குமா?

2017 தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கற்ற பாடம் - புதிய வியூகம் பலிக்குமா?
2017 தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கற்ற பாடம் - புதிய வியூகம் பலிக்குமா?

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளநிலையில், தேர்தலுக்குப்பிந்தைய நடவடிக்கைகளுக்காக, கோவா, உத்தராகண்ட் மாநிலங்களுக்கு மூத்த தலைவர்களை காங்கிரஸ் கட்சி அனுப்பியுள்ளது.

2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவா, மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும் கவனமாக காய் நகர்த்திய பாரதிய ஜனதா கட்சி சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சி அமைத்தது.



அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்கவும், எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலில் ஈடுபடாமல் இருக்கவும் தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி, தனது வேட்பாளர்களிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கியது.

கோவாவை பொருத்தவரை ஆளும் பாரதிய ஜனதா மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவினாலும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இருக்கின்றன. முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகன் உள்ளிட்டோரும் சுயேச்சையாக தேர்தல் களத்தில் இருப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் காங்கிரஸ் தனது வேட்பாளர்கள் அனைவரையும் அங்கு இருக்கக்கூடிய ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது. அவ்வப்போது வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சந்தித்து ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.



உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களிலும், காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com