ஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...!

ஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...!

ஹோட்டலுக்கு சென்ற வழக்கறிஞர்... முகத்தில் வெந்நீர் ஊற்றிய 5 பேர் கைது...!
Published on

நெல்லை முருகன்குறிச்சியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய கடை உரிமையாளர் உட்பட 5 பேர் மீது கொலை முயற்சி உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நெல்லை கேடிசி நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பிரம்மா. இவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்களை பெற்று நுகர்வோர் நீதிமன்றம் மூலமாக பல்வேறு வழக்குகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், அதிகாரிகள் மருத்துவமனைகள் மற்றும் ஹோட்டல்கள் மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்து அதனை நடத்தி வருகிறார்.

இதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்திய ஹோட்டல் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று மாலை அந்த உணவகத்துக்கு சாப்பிட சென்றுள்ளார் வழக்கறிஞர் பிரம்மா. அப்போது அக்கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வழக்கறிஞரின் முகத்தில் வெந்நீரை ஊற்றி தாக்குதல் நடத்தியுள்ளனர். 


இது தொடர்பான செல்போன் வீடியோ வெளியானது. அதனைத்தொடர்ந்து வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த நுற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல், கடை முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை காவல்துறையினர் தாக்குதல் நடத்திய கடை உரிமையாளர் ஹரி, மணிகண்டன் உட்பட 5 பேர் மீது கொலை முயற்சி கொலை மிரட்டல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் அவர்கள் 5பேரையும் கைது செய்த காவல்துறையினர் இன்று காலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த பின்பு நீதிபதி முன்பாக 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com