\
தமிழக அரசின் அலட்சியத்தால் அடையாளங்கள் சிதைப்பு: மு.க.ஸ்டாலின் சாடல்

தமிழக அரசின் அலட்சியத்தால் அடையாளங்கள் சிதைப்பு: மு.க.ஸ்டாலின் சாடல்

தமிழக அரசின் அலட்சியத்தால் அடையாளங்கள் சிதைப்பு: மு.க.ஸ்டாலின் சாடல்
Published on: 

தமிழக அரசின் அலட்சியத்தால் திராவிட கட்டடக் கலையின் அடையாளங்களான திருக்கோவில்கள் சிதைக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பணி என்ற பெயரில் அறநிலையத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் கோவில்கள் சிதைக்கப்படுவதாக சாடியுள்ளார். ஐ.நா.வின் யுனஸ்கோ அமைப்பு வெளியிட்ட இடைக்கால அறிக்கையை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், மதுரை, திருவண்ணாமலை, திருவரங்கம் கோயில்களில் வரலாற்று சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். கோவில் திருப்பணிகளுக்கான திட்ட அறிக்கைகள் எதுவுமே அறநிலையத்துறையிடம் இல்லை என குற்றஞ்சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின், வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதுடன், அவற்றை சிதைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com