டிரெண்டிங்
பாஜகவுக்கு எதிராக பிரமாண்ட கூட்டம்: தலைவர்கள் பங்கேற்பு
பாஜகவுக்கு எதிராக பிரமாண்ட கூட்டம்: தலைவர்கள் பங்கேற்பு
பீகார் தலைநகர் பாட்னாவில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் அழைப்பு விடுத்துள்ள மாநாட்டில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
லாலுவின் கட்சியும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணியில் இருந்தபோது பாஜவுக்கு எதிராக, ‘பாஜகவே ஓடு, தேசத்தை காப்பாற்றுவோம்’ என்ற பெயரில் பேரணி மற்றும் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்போது நிதிஷ்குமார், பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு ஆட்சியை தொடர்வதால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தை லாலுவே நடத்த முடிவு செய்தார். அதன்படி இந்த மாநாட்டுப் பேரணி பாட்னாவில் இன்று தொடங்கியது.
இதில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சரத் யாதவ், உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.