\
குங்ஃபூ பயிற்சி அளித்து பிரசாரம் -கவனம் ஈர்த்த மதுராந்தகம் மதிமுக வேட்பாளர்

குங்ஃபூ பயிற்சி அளித்து பிரசாரம் -கவனம் ஈர்த்த மதுராந்தகம் மதிமுக வேட்பாளர்

குங்ஃபூ பயிற்சி அளித்து பிரசாரம் -கவனம் ஈர்த்த மதுராந்தகம் மதிமுக வேட்பாளர்
Published on

மதுராந்தகம் சட்டமன்ற மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா இளைஞர்களுக்கு குங்ஃபூ தற்காப்பு கலை பயிற்சி அளித்து பிரசாரம் மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதியில், திமுக கூட்டணி வேட்பாளராக மதிமுக கழக துணை பொதுச்செயலாளர் மதிமுக மல்லை சத்யா களம் காண்கிறார். குங்ஃபூ கலையில் இவர் பல்வேறு பட்டம் மற்றும் விருதுகளை பெற்றுள்ள இவர் இன்று மதுராந்தகத்தில் நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இலவசமாக குங்ஃபூ, சிலம்பாட்டம், மான் கொம்பு, உள்ளிட்டப் பயிற்சிகளை அளித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

இது குறித்து பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தப்பகுதி இளைஞர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் திறக்கப்பட்டு இலவச பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com