கஞ்சா கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள இருவருக்கு குண்டாஸ்
நாமக்கல்லில் 300 கிலோ கஞ்சா கடத்திய இருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் தேதி, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நாமக்கல் வழியாக லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலில் அடிப்படையில் நாமக்கல் முருகன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த சரக்கு லாரியை நாமக்கல் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, 15 மூட்டைகளில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதன்பின் லாரியில்சே வந்த லம் மாவட்டத்தை சேர்ந்த கஞ்சா விபாபாரி பழனி (55) மற்றும் லாரி ஓட்டுனர் ராஜ்குமார் (34) மீது வழக்கு பதிந்து, கைது செய்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைதான இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து ஆட்சியர் மெகராஜ் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.