டிரெண்டிங்
கட்சி சார்பற்ற எம்.எல்.ஏ.வாக எனது பணிகள் தொடரும் - கு.க செல்வம் ட்வீட்
கட்சி சார்பற்ற எம்.எல்.ஏ.வாக எனது பணிகள் தொடரும் - கு.க செல்வம் ட்வீட்
கட்சி சார்பற்ற எம்.எல்.ஏ.வாக எனது பணிகள் தொடரும் என்று கு.க செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்த ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் தமிழக அரசியலில் விவாதத்தையும், பரபரப்பையும் உண்டாக்கினார். டெல்லி சென்ற அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் தான் பாஜகவில் இணையவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இதையடுத்து கு.க செல்வத்தை திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்த திமுக தலைமை, நேற்று அவரை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கி மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் கு.க செல்வம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் நலனுக்காக கட்சி சார்பற்ற எம்.எல்.ஏ.வாக எனது பணிகள் தொடரும்'' என்று பதிவிட்டுள்ளார்.