\
வீடியோ வெளியீடு வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்: கிருஷ்ணப்ரியா கண்டனம்

வீடியோ வெளியீடு வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்: கிருஷ்ணப்ரியா கண்டனம்

வீடியோ வெளியீடு வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்: கிருஷ்ணப்ரியா கண்டனம்
Published on

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டதற்கு சசிகலாவின் உறவினர் கிருஷ்ணப்ரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ வெளியாகி உள்ளது. டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் இதனை வெளியிட்டுள்ளார். இதனிடையே, டிடிவி தினகரனுக்கு தெரியாமலேயே வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக டிடிவி தினகரனின் மற்றொரு ஆதரவாளராக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டதற்கு சசிகலாவின் அண்ணன் மகளும், விவேக் ஜெயராமனின் சகோதரியுமான கிருஷ்ணப்ரியா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “TTV (? ) உடனிருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்” என கூறியிருக்கிறார்.

இந்த பதிவை இடுவதற்கு முன்னதாக அவர் “TTV இன் கீழ்த்தரமான செயல்” என்றுதான் முதலில் கிருஷ்ணப்ரியா குறிப்பிட்டிருந்தார். ஆனால் சற்று நேரத்தில் அதனை எடிட் செய்து “TTV (? ) உடனிருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல்” என மாற்றிவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com