அதிமுகவில் மாநிலங்களவை எம்.பிக்கள் கே.பி முனுசாமி, வைத்திலிங்கத்திற்கு எம்.எல்.ஏ சீட்!

அதிமுகவில் மாநிலங்களவை எம்.பிக்கள் கே.பி முனுசாமி, வைத்திலிங்கத்திற்கு எம்.எல்.ஏ சீட்!

அதிமுகவில் மாநிலங்களவை எம்.பிக்கள் கே.பி முனுசாமி, வைத்திலிங்கத்திற்கு எம்.எல்.ஏ சீட்!
Published on

அதிமுக சார்பாக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில், தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் பெயர் இடம்பெற்றிருக்கிறது.

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களாகவும்,  மாநிலங்களவை உறுப்பினர்களாகவும் உள்ள கே.பி.முனுசாமி மற்றும் ஆர்.வைத்திலிங்கம் முறையே வேப்பனஹல்லி, ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்கள். கடந்த 2016 தேர்தலில் கே.பி.முனுசாமி பென்னாகரம் தொகுதியிலும், ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் ஏற்கனவே முதற்கட்டமாக 6 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது 171 பேரை உள்ளடக்கிய இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இரண்டு பட்டியல்களையும் சேர்த்து மொத்தமாக இதுவரை 177 பேர் அதிமுக சார்பாக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com