சனா
சனாகூகுள்

கொல்கத்தா | கங்குலி மகள் சென்ற கார் மீது பின்னால் வந்த பேருந்து மோதி விபத்து..!

தன் தாயாரைப்போலவே நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட சனாவும் நடனம் மூலம் சிறுவயதிலேயே உலகளவில் பிரபலமானார்.
Published on

கொல்கத்தாத்தாவில் செளரவ் கங்குலி மகள் சென்ற கார் விபத்துக்குள்ளானது.

’கிரிக்கெட் உலகின் தாதா’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, மகத்தான சாதனைகளுக்குச் சொந்தக்காரராக உள்ளார். இவர் நடனக்கலைஞரான டோனாவை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு சனா என்ற ஒரு மகள் உண்டு. தன் தாயாரைப்போலவே நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட சனாவும் நடனம் மூலம் சிறுவயதிலேயே உலகளவில் பிரபலமானார். இவர் பட்டப்படிப்பை முடித்த கையோடு லண்டனில் Enactus UCL நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் ,சமீபத்தில் கொல்கத்தா வந்த சனா, காரில் வெளியே சென்று இருக்கிறார். இவரது கார் டயமண்ட் ஹார்பர் வீதியில் சென்றுக் கொண்டிருந்த பொழுது, பின்னால் வந்த பேருந்து ஒன்று இவரின் கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

சனா
லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் செளரவ் கங்குலி மகள்!

அதிர்ச்சியடைந்த கார் டிரைவர், பஸ்ஸை பின் தொடர்ந்து சென்று பஸ்ஸை வழிமறித்து நிறுத்தியுள்ளார். இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்து பயணித்த சனாவுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் இல்லை என்றாலும் காரானது சற்று சேதமடைந்துள்ளது.

பின் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் பஸ் டிரைவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com