கோடநாடு விவகாரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் ஸ்டாலின்

கோடநாடு விவகாரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் ஸ்டாலின்

கோடநாடு விவகாரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் ஸ்டாலின்
Published on

கோடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கிறார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். இது வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. அந்த வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, தனக்கும் கோடநாடு விவகாரத்திற்கு சம்பந்தமில்லை என தெரிவித்தார். அத்துடன் தன் மீதும், அதிமுக ஆட்சி மீதும் அவதூறு பரப்ப சிலர் பின்புலத்தில் இருந்து அரசியல் காரணங்களுக்காக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறினார். அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனிப்படை அமைத்து விசாரிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து, இதற்கிடையே கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை எஸ்பி செந்தில் குமார் தலைமையில் டெல்லி சென்றது. இந்நிலையில், கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரை காவல்துறையினர். மேத்யூஸை தமிழக போலீசார் இன்னும் கைது செய்யவில்லை. சயன், மனோஜ் கைது செய்யப்பட்டதை, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனும் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும் விரைவில் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தச் சூழலில் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5.30 மணிக்கு சந்திக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com