கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மீண்டும் தலை தூக்கும் போலி பட்டா சர்ச்சை..!

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மீண்டும் தலை தூக்கும் போலி பட்டா சர்ச்சை..!
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மீண்டும் தலை தூக்கும் போலி பட்டா சர்ச்சை..!
Published on

கொடைக்கானல் மலைப்பகுதிகளில்  அரசு தரிசு நிலங்களுக்கு போலி பட்டாக்கள் தயார் செய்து விற்பனை செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புலியூர், கோவில்பட்டி, அட்டுவம்பட்டி உள்ளிட்ட உட்கடை கிராம பகுதிகளில் உள்ள 400 ஏக்கர் அளவிலான அரசு தரிசு நிலங்களை வணிக நோக்கத்தில் போலி பட்டாக்கள் தயார் செய்து கடந்த 20 ஆண்டுகளாக விற்பனை செய்வதாக புகார் இருந்தது.


முன்னாள் கோட்டாட்சியர் சுரேந்திரனால் இந்த நில மோசடிகள் கண்டறியப்பட்டு அவை அனைத்தையும் ஆய்வு செய்து, மேற்படி பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பின்பு சிலமாதங்கள் அமைதியாக இருந்த நிலையில், மீண்டும் ரத்தான போலி பட்டாக்களை தயாரித்து நிலத்தை கையகப்படுத்தவும், விற்பனை செய்யவும் முயற்சிகள் நடைபெறுவதாக விவசாய சங்கங்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய பாரதிய கிசான் சங்கத்தின் மாநிலசெயலாளர் அசோகன், மலைப்பகுதிகளில் வெளிநாட்டவர்கள், அண்டைமாநிலத்தவர்கள், உள்மாநிலத்தவர்கள் என பல தரப்பினரும் விவசாய நிலங்களையும், அரசு தரிசு நிலங்களையும் முறைகேடாக பட்டா போட்டு வாங்கியுள்ளனர். விவசாயம் தவிர்த்து கட்டுமான வணிக நோக்கத்திற்காகவும் நிலங்கள் வாங்கப்படடுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்ய இருப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com