ஐபிஎல் தொடரில் இன்றையப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்கிறது.
அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் கொல்கத்தா அணி 17 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தா அணியில் வேகப்பந்பந்துவீச்சாளர் ஷிவம் மவிக்கு பதிலாக பிரசீத் கிருஷ்ணா இடம் பெற்று இருக்கிறார்.
அதேபோல பஞ்சாப் அணியில் வேகப்பந்துவீச்சாளர் காட்ரலுக்கு பதிலாக கிறிஸ் ஜார்டன் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.