சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா!
Published on

சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த சீசனின் மூன்றாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. நித்திஷ் ராணா 80 ரன்களும், ராகுல் திரிபாதி 53 ரன்களும் குவித்தனர். 

தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணிக்கு வார்னரும், சாஹாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வார்னர் 3 ரன்களிலும், சாஹா 7 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். பின்னர் களம் இறங்கிய பேர்ஸ்டோ மற்றும் மணிஷ் பாண்டே 92 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பேர்ஸ்டோ 55 அவுட்டாக பின்ன களம் இறங்கிய முகமது நபி மற்றும் விஜய் ஷங்கர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

ஏழாவது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய அப்துல் சமத் பேட் கம்மின்ஸ் வீசிய பத்தொன்பதாவது  ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய ரசல் அற்புதமாக பந்து வீசி வெறும் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து கொல்கத்தாவின் வெற்றிக்கு உதவினார். பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ், ரசல், ஷகிப்  அல் ஹசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். மணிஷ் பாண்டே 61 ரன்கள் அடித்தும் அணியை அவரால் வெற்றி பெற செய்ய முடியவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com