சரிந்த அணியை மீட்ட சுப்மன் கில், தினேஷ் கார்த்திக் - பஞ்சாப்க்கு 165 ரன் இலக்கு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெறுவதற்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக திரிபாதியும் சுப்மன் கில்லும் களமிறங்கினர். இதில் திரிபாதி 4 ரன்களில் ஷமி பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். இதற்கடுத்து களமிறங்கிய ரானா 2 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட் வீழ்ந்ததால் கொல்கத்தா அணி தடுமாறியது.
பின்பு ஜோடி சேர்ந்த மார்கனும், சுப்மன் கில்லும் அணியை ஓரளவுக்கு நிதானமாக ஆடி சரிவிலிருந்து மீட்டனர். ஆனாலும் மார்கன் 24 ரன்களில் பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து களமிறங்கிய கொல்க்ததா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். துணையாக விளையாடிய சுப்மன் கில்லும் அரை சதத்தை கடந்தார்.
பின்பு சுப்மன் கில் 57 ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து அதிரடியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஸல் 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் அரை சதமடித்தார்.
20 ஓவர்கள் முடிவில் தினேஷே கார்த்தக் 29 பந்துகளில் 58 ரன்கள் ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இறுதியாக கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது.