மும்பை அணி தோல்வி... பிளே ஆஃப் ரேஸில் தொடரும் கொல்கத்தா

மும்பை அணி தோல்வி... பிளே ஆஃப் ரேஸில் தொடரும் கொல்கத்தா

மும்பை அணி தோல்வி... பிளே ஆஃப் ரேஸில் தொடரும் கொல்கத்தா
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

பிளே ஆஃப்-க்கு செல்வதை உறுதி செய்ய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மும்பை அணி ஏற்கெனவே ரேஸில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், கொல்கத்தா அணி வாழ்வா சாவா என்ற கட்டத்தில் களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் சில போட்டிகளுக்கு பிறகு வெங்கடேஷ் ஐயர் மீண்டும் தொடக்க வீரராக களமிங்கினார். இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாத என உணர்ந்த அவர் அதிரடியாக பேட்டை சுழற்றினார்.

தொடக்க வீரரான வெங்கடேஷ் மற்றும் ரஹானா சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்க்கு 60 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த நிதிஷ் ராணாவும் தனது பங்குக்கு ரன்வேட்டை நடத்தினார். இறுதிநேர ரிங்கு சிங் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து கொல்கத்தா அணி 165 ரன்கள் சேர்த்தது. மும்பை அணியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை சாய்த்தார்.

அடுத்து பேட் செய்த மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினர். மறுமுனையில் தனி ஆளாக போராடி இஷான் கிஷன் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் எந்த வீரரும் தாக்குப்பிடிக்காததால் 17.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு மும்பை அணி ஆட்டமிழந்தது. கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்களை அதிகபட்சமாக கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப்க்கான ரேஸில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com