பரபரப்பான போட்டி... நூலிழையில் பஞ்சாபை வீழ்த்திய கொல்கத்தா !
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா த்ரில் வெற்றியை பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் தினேஷ் கார்த்திக் பேட்டிங் தேர்வு செய்தார். ஆரம்பத்தில் கொல்கத்தா அணி சொதப்பினாலும் சுப்மன் கில், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 164 ரன்களை எடுத்தது.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான மயாங்க் அகர்வால், கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடினர். மயாங்க் அகர்வால் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடினார்.
அகர்வால் அவுட்டான பின்பு களமிறங்கிய பூரண், பிரப்சிம்ரன் சிங், மந்தீப் சிங் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக கேஎல் ராகுலும் 74 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 1 பந்தில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் மாக்ஸ்வெல் தூக்கி அடித்தப்பந்து பவுண்டர்கோட்டின் அருகே விழுந்து சிக்ஸாக மாறாமல் பவுண்டரியாக மாறியது. இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா த்ரில் வெற்றிப் பெற்றது.