ராஜானாலும் ஒரு அளவில்லையா? ஷூ லேஸை எப்படி அயர்ன் பண்ணி.. - கிங் சார்லஸின் விநோத பழக்கம்!

ராஜானாலும் ஒரு அளவில்லையா? ஷூ லேஸை எப்படி அயர்ன் பண்ணி.. - கிங் சார்லஸின் விநோத பழக்கம்!
ராஜானாலும் ஒரு அளவில்லையா? ஷூ லேஸை எப்படி அயர்ன் பண்ணி.. - கிங் சார்லஸின் விநோத பழக்கம்!

இங்கிலாந்தின் நீண்டகால ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8ம் தேதி மறைந்ததை அடுத்து அவரது மகன் இளவரசர் மூன்றாம் சார்லஸ் பிரிட்டனின் அரசராக பிரகடனப்படுத்தப்பட்டார்.

மன்னராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அரச பட்டத்தை ஏற்று கையெழுத்திடும் நிகழ்வின் போது மூன்றாம் சார்லஸ் ஊழியர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்டது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதாவது, மேஜை மீது நிறைய பொருட்கள் இருந்ததால் அதைக் கண்டு கடுப்பான சார்லஸ் உடனடியாக அகற்றும்படி கறாராக பேசியிருந்தார்.

அதனையடுத்து ஆவணங்கள் சிலவற்றில் கையெழுத்திடும் நிகழ்வு நடந்தபோது கையொப்பமிட்ட பிறகு பேனாவில் இருந்த சாயம் மன்னர் சார்லஸின் கையில் ஒட்டவே அதைக் கண்டு கோபமடைந்திருக்கிறார்.

அப்போது, “அடச்சை.. நான் இதை வெறுக்கிறேன்.. ஒவ்வொரு முறையும் இவங்க இப்படி செய்வதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது” எனக் கடிந்து பேசியிருந்த வீடியோவும் இணையத்தில் பரவியிருக்கிறது. மன்னரின் இந்த கடிந்த கோபம் பிரிட்டன் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படியாக, இங்கிலாந்தின் மன்னராக மூன்றாம் சார்லஸ் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தலைப்புச் செய்தியாக இருந்து வருகிறார். அந்த வகையில் மன்னர் சார்லஸின் வித்தியாசமான பழக்கவழக்கங்கள் குறித்த தகவல்களும் வெளியாகியிருக்கிறது. அவை என்னென்ன என்பதை காணலாம்:

தனிக் கழிவறை உடனேயே கிங் சார்லஸ் பயணிப்பார்:

இளவரசராக இருந்த போதும் சரி, தற்போது அரசராக ஆனப்பிறகும் சரி மூன்றாம் சார்லஸ் எப்போதும் தனக்கான கழிவறையை தன்னகத்தே எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பாராம். அதனோடு கூட Kleenex Velvet toilet பேப்பரையும் உடன் இருக்குமாம். இது கடந்த 2015ம் ஆண்டு Serving the Royals: Inside the Firm என்ற ஆவணத் தொகுப்பின் போது மறைந்த இளவரசி டயானாவிற்கும், ராணி இரண்டாம் எலிசபெத்திற்கும் பட்லராக இருந்த பால் பர்ரெல் கூறியிருக்கிறார்.

டினா பிரவுன் என்ற எழுத்தாளர் ‘The Palace Papers: Inside The House Of Windsor – The Truth and The Turmoil’ என்ற பெயரில் புத்தகமே எழுதியிருக்கிறார். அதில், “கிங் சார்லஸ் தன்னுடைய நண்பர்களுடன் வெளியே செல்வதாக இருந்தால் முந்தைய நாளே அவர் செல்லக் கூடிய ட்ரக்கில் செட் செய்வதற்கான ஆர்த்தோபெடிக் பெட், படங்கள், கழிவறை இருக்கைகள், வெல்வட் பேப்பர்கள் எல்லாம் தயாராகிவிடுமாம்.

ஷு லேஸை இஸ்திரி செய்துதான் அணிவாராம்:

முன்னாள் பட்லரான பால் பர்ரெல் கூறுகையில், “மன்னர் சார்லஸ் தனது ஷூ லேஸ்களை அயர்ன் செய்ய துல்லியமான அறிவுரைகளை வழங்குவார். அவருடைய பாத்ரூமில் இருக்கும் பிளக்குகள் குறிப்பிட்ட இடத்தில்தான் இருக்க வேண்டும். பைஜாமாக்கள் முறையாக அயர்ன் செய்யப்பட வேண்டும். பாத் டப்பில் பாதி நிரம்பிய அளவுக்கு வெதுவெதுப்பான நீர் நிரப்பட்டிருக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கிங் சார்லஸ் வெளியே செல்லும் போதெல்லாம் பிரேக் ஃபாஸ்ட் பாக்ஸும் உடன் செல்லுமாம்:

கிரஹாம் நியூபோல்ட் என்ற அரண்மனையின் முன்னாள் செஃப் நியூயார்க் போஸ்டிடம் பேசியபோது, “கிங் சார்லஸ் எப்போதும் ஆரோக்கியமான உணவைதான் உண்பார். அவர் வெளியே செல்லும் போதெல்லாம் பிரேக்ஃபாஸ்ட் பாக்ஸும் அவருடன் செல்லும். அதில் ஆறு வகையான தேன், பாரம்பரியமான ஓட்மீல் உணவு, உலர் பழங்கள், பிரட், ஃப்ரஷ் ஃப்ரூட்ஸ் ஆகியவை இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com