போட்டி முடிந்த கையோடு மேஜிக்கல் மொமண்ட்டை ஏற்படுத்திய ஹாங்காங் கிரிக்கெட்டர் கிஞ்சித்ஷா!

போட்டி முடிந்த கையோடு மேஜிக்கல் மொமண்ட்டை ஏற்படுத்திய ஹாங்காங் கிரிக்கெட்டர் கிஞ்சித்ஷா!

போட்டி முடிந்த கையோடு மேஜிக்கல் மொமண்ட்டை ஏற்படுத்திய ஹாங்காங் கிரிக்கெட்டர் கிஞ்சித்ஷா!
Published on

நடப்பு ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டி20 போட்டியில் முதல் முறையாக ஹாங்காங் அணி களம் கண்டுள்ளது.

அந்த வகையில் நேற்று துபாயில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஹாங்காங் அணி தோல்வியை தழுவியிருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாக ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் வெறும் இரண்டே விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்களை குவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய ஹாங்காங் அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 152 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் ஹாங்காங் அணி வீரர்கள் திறமையாக ஆடியிருந்தாக பல தரப்பிடம் இருந்தும் வரவேற்புகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹாங்காங் கிரிக்கெட் அணியின் வீரர் கிஞ்சித் ஷா போட்டி நடந்து முடிந்த பிறகு ஸ்டேடியத்தில் வைத்து தன்னுடைய பெண் தோழியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது மனங்களையும் வென்றிருக்கிறது.

அதன்படி, காதலி முன் மண்டியிட்டு மோதிரத்தை நீட்டி திருமணம் செய்துக் கொள்ளலாமா என கிஞ்சித் ஷா கேட்க அதற்கு அந்த பெண்ணை யெஸ் என தலையசைத்ததும் காதலியின் விரலில் கிஞ்சித் ஷா மோதிரத்தை அணிவிக்கிறார். பின்னர் ஷாவை அவரது காதலி வாஞ்சையுடன் கட்டியணைக்கிறார்.

கிஞ்சித் ஷாவின் இந்த ப்ரபோசல் வீடியோவை கண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த காதல் ஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com