மாதிரி படம்
மாதிரி படம்புதியதலைமுறை

கேரளா | சன்கிளாஸ் அணிந்து வந்ததால் முதல்வருட மாணவரை தாக்கிய சீனியர் மாணவர்கள்!

கல்லூரிகளில் ராக்கிங் செய்வது சட்டப்படி தவறு என்றாலும், ராக்கிங் செய்யப்படுவது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைப்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
Published on

கோழிக்கோடு அடுத்துள்ள நடக்காவுவிலுள்ள ஹோலிகிராஸ் கல்லூரியில் பயின்று வரும், இளங்கலை மாணவர் ஒருவர் ராக்கிங் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் ராக்கிங் செய்வது சட்டப்படி தவறு என்றாலும், ராக்கிங் செய்யப்படுவது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைப்பெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

கேரளாவில் சன்கிளாஸ் அணிந்துவந்ததற்காக சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவரை தாக்கியசம்பவம் அதிர்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோழிக்கோடு மாநிலத்தில் உள்ள நடக்காவுற்கு அருகில் இருக்கும் ஹோலிகிராஸ் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருபவர் விஷ்ணு... இவர் கடந்த 14ம் தேதி கல்லூரிக்கு சன்கிளாஸ் அணிந்து வந்துள்ளார்.

விஷ்ணு சன்கிளாஸ் அணிந்து வந்தது பிடிக்காமல் அதே கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர்களான முகமது சினான் மற்றும் கௌதம் மற்றும் சில சீனியர் மாணவர்கள், என ஆறு பேர் கொண்ட கும்பல் கல்லூரியில் உள்ள வாலிபால் மைதானத்திற்கு விஷ்ணுவை வரவழைத்து, சன்கிளாஸ் அணிந்து வந்ததற்காக அடித்துள்ளனர்.

குற்றம்
குற்றம்web

இதில் விஷ்ணுவின் தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து விஷ்ணுக் கொடுத்த புகாரின் அடிப்படையில், கல்லூரி நிர்வாகம் சிசிடிவியை ஆதாரமாக கொண்டு, ராக்கிங் செய்த மாணவர்கள் மேல் போலிசில் புகார் அளித்தது. இதனை அடுத்து காவல்துறை தாக்குதலை நடத்திய 6 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com