\
SATHEESAN
SATHEESAN ANI

“சாரே.. அடிப்பொலியானோ” 'ஜெயிலர்-2' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட CM.. வைரலான AI வீடியோவை நீக்கிய Meta!

OG வெர்ஷனையே மறக்கடிக்கும் அளவுக்கு இணையத்தில் ட்ரெண்ட் ஆனது, கேரள முதல்வர் வி.டி. சதீசன் ஆடுவது போன்ற AI வீடியோ.
Published on

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

திரைக்கு வந்த பிறகு திரையிசைப் பாடல்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடிப்பதுண்டு. ஆனால், ஒரு சில பாடல்கள் மட்டுமே திரைக்கு வருவதற்கு முன்பே மக்களின் கவனத்தை ஈர்த்துவிடும். அப்படி, திரைக்கு வருவதற்கு முன்பே வைரலான பாடல்தான், அக்டோபரில் வெளியாக இருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் ஷம்னா காசிம் ஆடும் “அலமேலே அல்லெ அல்லெ லேய்” பாடல். இப்பாடல் வெளியானது முதல், இளம் தலைமுறையினரிடையே பாடலுடன் சேர்த்து நடிகை ஆடிய நடனமும் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், தற்போது அந்த OG வெர்ஷனையே மறக்கடிக்கும் அளவுக்கு இணையத்தில் ட்ரெண்ட் ஆனது, கேரள முதல்வர் வி.டி. சதீசன் ஆடுவது போன்ற AI வீடியோ.

AI
AIANI

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, அம்மாநில முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார் வி.டி. சதீசன். முதல்வராகப் பொறுப்பேற்றபோதே அவர் செய்த சைகைகள் ’பூக்கி CM’ என அவரை இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கிவிட்டன. இந்நிலையில், தற்போது கேரளாவில் நிலவி வரும் தொடர் மின்வெட்டுகளை விமர்சிக்கும் வகையில், கேரள மாநில மின்வாரிய ஊழியர்களுடன் அம்மாநில முதல்வர் சதீசன் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போடுவது போன்ற வீடியோவை AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ ஒரே இரவில் மீண்டும் கேரள முதல்வரை இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கியது.

இந்த வீடியோவை சீரியஸாக எடுத்துக்கொள்ளாத முதல்வர், சமீப காலங்களில் AI பல்வேறு விஷயங்களைச் சுலபமாகச் செய்து விடுகிறது எனக் குறிப்பிட்டு சமீபத்தில் தான் நடனமாடுவது போன்ற AI-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோவையும் பார்த்ததாகத் தெரிவித்த அவர், “உண்மையில், திரைத்துறையின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் தமிழ்நாடு முதல்வரும் நண்பருமான விஜயைவிடவும் அந்த வீடியோவில் நான் சிறப்பாக நடனமாடியுள்ளேன்” எனப் பெருமிதத்துடன் சிரித்தபடி கருத்து தெரிவித்தார். மின்வெட்டை விமர்சிக்கும் வகையில் வெளியிடப்பட்ட வீடியோவை முதல்வர் பாராட்டிப் பேசியது அம்மாநிலத்தில் எதிர்பாராத கருத்துகளைப் பெற்று, நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

Meta
Meta Reuters

இந்நிலையில், கேரள முதல்வர் வி.டி. சதீசன் நடனம் ஆடுவது போன்ற வீடியோவை இந்தியாவில் Meta நிறுவனம் கட்டுப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை உருவாக்கிய திருச்சூரைச் சேர்ந்த ‘ரீச் யூ டாட்’ நிறுவனத்தின் ‘AI காவாலா’ சமூக வலைதளப் பக்க உரிமையாளரான அபிஜித் கே.எஸ்., தெரிவிக்கையில் ஒரு புகாரின் அடிப்படையில் இந்தியாவில் அந்த வீடியோ நீக்கப்பட்டதாக Meta நிறுவனத்திடம் இருந்து தங்களுக்கு தகவல் வந்ததாகத் தெரிவித்தார். எனினும், வீடியோ நீக்கப்பட்டதற்கு எதிராகப் புகார் அளிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். AI மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பும், பின்னர் Meta எடுத்த நடவடிக்கையும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதேவேளையில், AI வீடியோக்கள் மூலம் அரசியல் தலைவர்களைப் போலியான காட்சிகளில் சித்தரிப்பது தொடர்பான விவாதமும் மீண்டும் எழுந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com