கேரளா | ”என்னையா வழியவிடச் சொல்ற” பேருந்து வழி விட மறுத்து குச்சியை காட்டி மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர்!

கேரளா... பேருந்துக்கு வழிவிடாமல், கையில் குச்சியுடன் பேருந்தை மிரட்டியபடி சென்ற ஆட்டோ...
மிரட்டல் விடுத்த ஆட்டோ
மிரட்டல் விடுத்த ஆட்டோகூகுள்

கேரளா... பேருந்துக்கு வழிவிடாமல், கையில் குச்சியுடன் பேருந்தை மிரட்டியபடி சென்ற ஆட்டோ ஓட்டுநர்.. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்...

கேரளா... மலப்புரம் கொட்டாபுரத்தில் இருந்து ஏர்போர்ட் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் ஒரு தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோழிக்கோட்டிலிருந்து மாஞ்சேரி நோக்கி சென்றுள்ளது. அதன் பின்னால் ஒரு ஆட்டோ ஒன்று தொடர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில், புலிகால் நிறுத்தத்தில் பேருந்து நிற்கவே, அந்நிறுத்தத்தில் வயதான பெண் உட்பட இரு பெண்கள் இறங்குவதில் சற்று தாமதமாகியதாகக் கூறப்படுகிறது. அச்சமயம் பின்னால் வந்த ஆட்டோ, நீண்ட ஒலியை எழுப்பி, பேருந்தை கடந்து சென்றது. பயணிகள் இறங்கியதும் மீண்டும் பேருந்து புறப்படவே, பேருந்திற்கு வழிவிடாமல் ஆட்டோ நடுவில் சென்றுகொண்டிருந்தது.

மிரட்டல் விடுத்த ஆட்டோ
கேரளா: தவறான பாதையை காட்டிய கூகுள்மேப்.. வழி தவறிச் சென்று காருடன் தண்ணீரில் தத்தளித்த நண்பர்கள்!

இதனால் பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்து ஆட்டோவை வழிவிடும் படி கேட்டுள்ளார். ஆனால், ஆட்டோ ஓட்டுனர் கையில் ஒரு குச்சியை எடுத்து பேருந்து முன் அசைத்து காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டல் ஆனது அந்த சாலை முடியும் வரை தொடர்ந்துள்ளது.

சாலையின் முடிவில் ஆட்டோவானது விமானநிலைய சாலையில் சென்றது பேருந்து கொண்டோடியில் உள்ள உதவி மையத்தை அடைந்து போலிசில் புகார் கொடுத்து அதன் பின் தனது பயணத்தை தொடர்ந்தது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள் “டேய் யார்டா நீ...” என்று கலாய்த்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com