டிரெண்டிங்
தமிழக நிலத்தை கேரள அரசு ஆக்கிரமித்துள்ளது: வேல்முருகன் குற்றச்சாட்டு
தமிழக நிலத்தை கேரள அரசு ஆக்கிரமித்துள்ளது: வேல்முருகன் குற்றச்சாட்டு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எல்லைப்பகுதியில் கேரள அரசு தமிழகத்தின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக - கேரள எல்லையான தாளூர் பகுதியில் கேரள அரசு 100 மீட்டர் தூரம் ஊடுருவி, புதிதாக எல்லைக்கல்லை நட்டு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து தாளூர் மக்கள் புகார் அளித்தும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.