அமெரிக்காவின் அச்சுறுத்தலை முனைப்புடன் எதிர் கொண்டு வருவதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.
திருவனந்தபுரம் அருகில் நடைபெற்ற கட்சி கூட்டம் ஒன்றில் பேசிய பினராயி விஜயன், “அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகளையும், அதிபர் டொனால்டு ட்ரம்பின் ராணுவ அச்சுறுத்தல்களையும் எதிர்த்து நிற்பதில் கிம் ஜாங் யுன் தலைமையிலான வடகொரிய அரசு முன்னிலையில் உள்ளது” என்றார். மக்களுடன் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரில் சீன அரசு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இடுக்கி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற சிபிஎம் கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஒன்றில் வைக்கப்பட்ட பேனரில் கிம் ஜாங் யுன் படம் இடம்பெற்றது சர்ச்சைக்குள்ளான நிலையில், பினராயி விஜயன் இந்தக் கருத்தினை கூறியுள்ளார்.