\
‘நெடுவாசல், கதிராமங்கலம்’: சட்டப்பேரவையில் பேச ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு

‘நெடுவாசல், கதிராமங்கலம்’: சட்டப்பேரவையில் பேச ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு

‘நெடுவாசல், கதிராமங்கலம்’: சட்டப்பேரவையில் பேச ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு
Published on

நெடுவாசல், கதிராமங்கலத்தில் நடக்கும் போராட்டம் பற்றி சட்டப்பேரவையில் பேச முயன்ற தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார்.

முன்னதாக, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும், கதிராமங்கலத்தில் சுமூகநிலை ஏற்பட வேண்டுமானால், போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட மக்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை, தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் ‌கேட்டுக்கொண்டார். நேரமில்லா நேரத்தின்போது நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் போராட்டம் பற்றி அவர் மேலும் பேச முற்பட்டபோது, இது தொடர்பாக ஏற்கனவே பேரவையில் பேசப்பட்டு விட்டதாகக் கூறி ஸ்டாலினுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com