கமல்ஹாசனுக்கு கரூர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு

கமல்ஹாசனுக்கு கரூர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு

கமல்ஹாசனுக்கு கரூர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவு
Published on

‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்ற சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கில் கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான பிரச்சாரத்திற்காக கடந்த மே 12 ஆம் தேதி கமல்ஹாசன் அரவக்குறிச்சி சென்றிருந்தார். அப்போது அங்கே  மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” எனத் தெரிவித்தார். 

மேற்கொண்டு,  “இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. அங்கு தொடங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்கு பின்னணி கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமாக இந்தியாவாக, மூவர்ண கொடியின் மூன்று நிறங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியர்களின் ஆசை.நான் நல்ல இந்தியன். அதனை மார்தட்டிச் சொல்வேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்திய அளவில் பெரும் சர்ச்சை வெடித்தது. வழக்கு போடும் அளவுக்கு இந்தப் பிரச்னை தீவிரமடைந்தது. கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி, இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின்போரில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது 153, 259 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எந்த நேரமும் கமல் கைது செய்யப்படலாம் எனச் செய்தி பரவியது. ஆகவே கமல்ஹாசன் தரப்பில் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடினர்.

முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் கமல்ஹாசன். கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலுக்கு முன்ஜாமீன் வழங்கியது கரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. கரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கமல்ஹாசன் முன்ஜாமீன் பெற்றுக்கொண்டார்.  

ஏற்கெனவே இந்தச் சர்ச்சை தொடர்பான இன்னொரு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த மே 20 ஆம் தேதி கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன், வழங்கி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com