கொள்ளுப் பேரன் திருமண விழாவில் பங்கேற்கிறார் கருணாநிதி
ஓராண்டுக்கு பிறகு முதன்முறையாக திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் நடைபெறவுள்ள திருமண விழாவில் பங்கேற்கிறார்.
கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், கடந்த ஒரு ஆண்டாக சிகிச்சை பெற்று வந்தார். இதனால், பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், கோடம்பாக்கத்திலுள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முரசொலி பவளவிழா கண்காட்சி அரங்கை சமீபத்தில் கருணாநிதில் நேரில் பார்வையிட்டார். சுமார் இருபது நிமிடங்கள் முரசொலி அலுவலகத்தில் அவர் செலவிட்டார்.
இந்த நிலையில், கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனுரஞ்சித்திற்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி பங்கேற்க உள்ளார். ஓராண்டுக்கு பிறகு முதன்முறையாக கருணாநிதி திருமண விழாவில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

