பேச்சுவார்த்தையை திமுகவும் முன்னெடுக்க வேண்டும் - கர்நாடக அமைச்சர் சிவக்குமார்

பேச்சுவார்த்தையை திமுகவும் முன்னெடுக்க வேண்டும் - கர்நாடக அமைச்சர் சிவக்குமார்

பேச்சுவார்த்தையை திமுகவும் முன்னெடுக்க வேண்டும் - கர்நாடக அமைச்சர் சிவக்குமார்
Published on

மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தையை திமுகவும் முன்னெடுக்க வேண்டும் என்று கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார். 

காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்னை உள்ள நிலையில், புதிய அணை கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. 

இதனிடையே, மேகதாது அணை விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கையில் பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களையும் எழுப்பினர். 

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கர்நாடக அமைச்சர் சிவக்குமார் டெல்லியில் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தையை திமுகவும் முன்னெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், “மேகதாது அணைநீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படாது என்று உறுதி தர தயார். திட்டம் குறித்து அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். காவிரி விவகாரத்தில் இப்போது சாவி எங்கள் கையில் இல்லை, மத்திய நீர்வள ஆணையத்தின் கைகளில் சாவி இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com