"சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் எங்கள் குடும்பத்துக்கு சொந்தமானதல்ல"

"சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் எங்கள் குடும்பத்துக்கு சொந்தமானதல்ல"

"சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் எங்கள் குடும்பத்துக்கு சொந்தமானதல்ல"
Published on

கர்நாடக அமைச்சர் சிவக்குமாருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான பணம் இல்லை என சிவக்குமாரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவரது சகோதரர் சுரேஷ், மொத்தம் 70 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் தங்கள் குடும்பத்தினருக்கு சொந்தமானது இல்லை என்றும் கூறியுள்ளார். எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வருமான வரித்துறை சோதனை நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரிவித்துள்ள சுரேஷ், மூத்த தலைவர்கள் பலரும் இந்த நிலையில் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

குஜராத் மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றதை அடுத்தே சிவக்குமாருக்கு எதிராக இத்தகைய சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com