கர்நாடக தேர்தலில் வெற்றி யாருக்கு? - குழப்பிய கருத்துக் கணிப்பு முடிவுகள்
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ், பாஜக இடையே இழுபறி இருப்பதையே காட்டுகிறது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
கருத்துக் கணிப்பு முடிவுகள் பின்வருமாறு:-
1.டைம்ஸ் நவ்-விஎம்ஆர் :-
காங்கிரஸ் : 90-103
பாஜக : 80-93
ஜேடி(எஸ்) : 31-39
2.இந்தியா டுடே, ஆக்ஸிஷ்
காங்கிரஸ் : 106-118
பாஜக : 79-92
ஜேடி(எஸ்) : 22-30
3.ரிபப்ளிக் டி-ஜன் கி பாத்
காங்கிரஸ் : 73-80
பாஜக : 95-114
ஜேடி(எஸ்) : 32-43
4.கன்னட தொலைக்காட்சி சுவர்னா
காங்கிரஸ் : 106-118
பாஜக : 79-92
ஜேடி(எஸ்) : 22-30
மற்றவர்கள்: 1-4
5.தக்விஜய் நியூஸ்
காங்கிரஸ் : 76-80
பாஜக : 103-107
ஜேடி(எஸ்) : 31-35
மற்றவர்கள்: 4-8
6.நியூஸ் நேஷன்
காங்கிரஸ் : 71-75
பாஜக : 105-109
ஜேடி(எஸ்) : 36-40
மற்றவர்கள் : 3-5
7.ஆஜ்டக்
காங்கிரஸ் : 106-118
பாஜக : 72-76
ஜேடி(எஸ்) : 25-30
மற்றவவை: 4-8
8.நியூஸ்X-சிஎன்எக்ஸ்
காங்கிரஸ் : 72-75
பாஜக : 102-106
ஜேடி(எஸ்) : 35-38
மற்றவை : 3-6
9.ஏபிபி
காங்கிரஸ் : 87-95
பாஜக : 97-106
ஜேடி(எஸ்) : 21-30
மற்றவை : 1-8