கர்நாடக பேரவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பா.ஜ.க ஆட்சியை பிடிக்கவும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. மே 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் காந்தி நகர், ஹனூர், கோலார் தங்கவயல் (தனி) ஆகிய 3 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. காந்தி நகர் தொகுதியில் யுவராஜூம், ஹனூர் தொகுதியில் விஷ்ணுகுமாரும், கோலார் தங்கவயல் தொகுதியில் அன்புவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.