கர்நாடக தேர்தல்: என்ன சொல்கிறது கருத்துக் கணிப்பு?

கர்நாடக தேர்தல்: என்ன சொல்கிறது கருத்துக் கணிப்பு?

கர்நாடக தேர்தல்: என்ன சொல்கிறது கருத்துக் கணிப்பு?
Published on

கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமையும் என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது. 224 தொகுதி களில் பெரும்பான்மைக்குத் தேவையான 112 தொகுதி, எந்தக் கட்சிக்கும் கிடைக்காது எனத் தெரிகிறது.

ஏபிபி (ABP) செய்தி நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில், பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும், அக்கட்சி 89 முதல் 95 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 85 முதல் 91 தொகுதிகளிலும், மதச் சார்பற்ற ஜனதா தளம் 32 முதல் 38 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியா டுடே கருத்துக் கணி ப் பின்படி, காங்கிரஸ் கட்சி 90 அல்லது 91 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. பா.ஜ.க. 76 முதல் 86 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

டிவி9 கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சி 102 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பா.ஜ.க. 96 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. டைம்ஸ் நவ் விஎம்ஆர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரசுக்கு 91 இடங்களும், பாரதிய ஜனதாவுக்கு 89 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களை பிடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com