\
கமல்ஹாசனை சந்தித்தார் கர்நாடக டிஐஜி ரூபா

கமல்ஹாசனை சந்தித்தார் கர்நாடக டிஐஜி ரூபா

கமல்ஹாசனை சந்தித்தார் கர்நாடக டிஐஜி ரூபா
Published on: 

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா பல சலுகைகளை அனுபவித்து வருகிறார் என புகார் எழுப்பிய கர்நாடக டிஐஜி ரூபா கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.

அதற்கான புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் டிஐஜி ரூபா நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசி இருக்கிறார். அந்தப் புகைப்படம் தற்போது  ட்விட்டரில் ஊடகத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் அவர் தன் பதிவில், “என் தமிழ்நாட்டு நண்பர்களே.. நான் மிக அருமையான தருணத்தில் இந்தப் படத்தை பிடித்தேன். கமல்ஹாசன் வெர்சடைல் நடிகர் மற்றும் டைரக்டர் ” என குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில் “நான் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டால் அவர்களுடைய கொள்கைகளையோ, அவர்களின் செயலையோ அப்படியே ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் கிடையாது. எல்லோரும் எல்லா தரப்பு மக்களையும் பார்க்கலாம்” எனக் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com