குஷ்பு பொதுக்குழு உறுப்பினாரா?... இது காங்கிரஸின் புது சர்ச்சை!

குஷ்பு பொதுக்குழு உறுப்பினாரா?... இது காங்கிரஸின் புது சர்ச்சை!

குஷ்பு பொதுக்குழு உறுப்பினாரா?... இது காங்கிரஸின் புது சர்ச்சை!
Published on

அடிப்படை உறுப்பினர் அட்டையைக் கூட புதுப்பிக்காத குஷ்புவை பொதுக்குழு உறுப்பினராக நியமித்தது எப்படி என காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இ‌ளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் 688 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் கூட ஐந்து ரூபாய் விண்ணப்பக் கட்டணமும், நூறு ரூபாய் அடிப்படை உறுப்பினர் கட்டணமும் செலுத்தி உறுப்பினர் அட்டையை புதுப்பித்துள்ள நிலையில், அடிப்படை உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காத குஷ்பு, எப்‌படி பொதுக்குழு உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்று கராத்தே தியாகராஜன் புகார் கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com