காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் !
காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். இவரை தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடடினயாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு எதிரான தொடர் நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் கூறினார். கராத்தே தியாகராஜனின் இந்த பேச்சை தொடர்ந்து திமுகவும் தனித்து போட்டியிட வேண்டும் என கே.என்.நேரு பேசினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.