`சோனியா காந்தி குடும்பம் காங்கிரஸிலிருந்து விலக வேண்டும்'- தொடரும் ஆதரவும் எதிர்ப்பும்

`சோனியா காந்தி குடும்பம் காங்கிரஸிலிருந்து விலக வேண்டும்'- தொடரும் ஆதரவும் எதிர்ப்பும்
`சோனியா காந்தி குடும்பம் காங்கிரஸிலிருந்து விலக வேண்டும்'- தொடரும் ஆதரவும் எதிர்ப்பும்

காங்கிரஸ் தலைமைப் பதவிகளில் இருந்து சோனியா காந்தி குடும்பம் விலக வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இது குறித்து அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் செயற்குழு கூட்டம் கூடி விவாதித்தது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமை பதவிகளில் இருந்து சோனியா காந்தி குடும்பத்தினர் விலக வேண்டும் என ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியிருந்தார்.

காங்கிரஸ் அனைவருக்குமான கட்சியாக இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும், ஆனால் சிலர் அக்கட்சி ஒரு குடும்பத்திற்கானதாக இருக்க வேண்டும் என நினைப்பதாகவும் கபில் சிபல் கூறியிருந்தார். கபில் சிபலின் இப்பேச்சுக்கு காங்கிரஸின் பிற தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸின் தலைமையிலிருந்து சோனியா காந்தி குடும்பத்தை அகற்றுவது மூலம் அக்கட்சியையும் இந்தியா என்ற சித்தாந்தத்தையும் அழித்துவிடலாம் என ஆர்எஸ்எஸ், பாஜக கருதுவதாகவும் இதை கபில் சிபலின் கருத்து எதிரொலிப்பதாகவும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

`கபில் சிபலின் கருத்து எதிர்பாராதது. கட்சி பின்னடைவை சந்திக்கும் நேரங்களில் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். `காங்கிரஸ் தலைமை குறித்து பேசும் கபில் சிபல், அப்பதவிக்கான போட்டியில் இறங்கலாமே’ என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com