தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் கனிமொழி?

தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் கனிமொழி?

தூத்துக்குடியில் போட்டியிடுகிறார் கனிமொழி?
Published on

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி போட்டியிட விருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

திமுக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதுமட்டுமில்லாமல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, மார்ச் ஒன்றாம் தேதி முதல் திமுகவில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முதல் நாளில் முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்டோர் போட்டியிடுவதற்கு மனுக்கள் கொடுத்துள்ளனர். 

இந்நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அண்ணா அறிவாலயத்தில் நாளை விருப்ப மனு தாக்கல் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இந்த மனுவை அவர் தாக்கல் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com