பெண் பத்திரிக்கையாளரை அனுமதி இல்லாமல் தொடுவதா..? - கனிமொழி

பெண் பத்திரிக்கையாளரை அனுமதி இல்லாமல் தொடுவதா..? - கனிமொழி
பெண் பத்திரிக்கையாளரை அனுமதி இல்லாமல் தொடுவதா..? - கனிமொழி

பெண் பத்திரிக்கையாளரை அனுமதி இல்லாமல் அவரை தொடுவது, கண்ணியமான செயலல்ல என்று திமுக மாநிலங்களை எம்.பி கனிமொழி கூறியுள்ளார். 

கனிமொழி தனது முகநூல் பக்கத்தில், “நோக்கம் தவறானதாக இல்லாது இருப்பினும், பொது வாழ்வில் இருப்போர், கண்ணியத்தையும், நாகரீகத்தையும் கடைப்பிடிப்பது அவசியம். பெண் பத்திரிக்கையாளரை அனுமதி இல்லாமல் தொடுவது, கண்ணியமான செயலல்ல. சக மனிதருக்கு உரிய மரியாதையை அளிப்பது, பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை” என்று குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழிநடத்துகிறார் என்ற புகார் விஸ்வரூபம் எடுத்து நிலையில், ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆளுநரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு அவரை துளைத்து எடுத்தனர். பின்னர் செய்தியாளர் சந்திப்பு முடியும் போது பெண் நிருபர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார். அதற்கு நீங்கள் என் பேத்தி மாதிரி என்று கூறிய ஆளுநர் பெண் நிருபரின் கன்னத்தில் லேசாக தட்டினார். இந்த விவகாரம் குறித்து அந்த பத்திரிக்கையாளரும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தியை பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, ஒப்புதலின்றி கன்னத்தில் ஆளுநர் தட்டியது நியாயமா? என்று கேள்வி எழுப்பிய பெண் பத்திரிக்கையாளருக்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது ஆதரவு தெரிவித்துள்ளார். ‘ஆளுநரின் செயல்பாடு துரதிருஷ்டவசமானது மட்டும் அல்ல. அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்கு துளியும் ஏற்புடையதல்ல’ என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com