கண்ணையா குமாரை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள் - வைரல் வீடியோ

கண்ணையா குமாரை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள் - வைரல் வீடியோ
கண்ணையா குமாரை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள் - வைரல் வீடியோ

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக சென்ற கண்ணையா குமாரை உள்ளுர் மக்கள் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பிகார் மாநில பெகுசராய் தொகுதி சார்பில் கண்ணையா குமார் போட்டியிடுகிறார். இதற்காக அவர் அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கண்ணையா குமார் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் பெகுசராய் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தப் போது அவருக்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் இளைஞர்கள் சிலர் கண்ணையா குமாரிடம், “உங்களுக்கு எந்தவகையா சுதந்திரம் வேண்டும்? நீங்கள் அரசியலுக்கு வந்தது நல்லது. ஆனால் எதற்காக 10% இடஒதுக்கீட்டை நீங்கள் எதிர்த்தீர்கள்” எனக் கேள்வி எழுப்பி விவாதத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே சில வாரங்கள் முன் பெகுசராய் பகுதியிலிருந்து லோஹிநகர் பகுதிக்குச் செல்லும் போது வழி நெடுகிலும் கருப்பு கொடியுடன் கண்ணையா குமாருக்கு எதிராக சிலர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். கண்ணையா பாஜகவின் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார். 2016ஆம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பதியப்பட்ட தேசதுரோக வழக்கு குற்றப்பத்திரிகையில் இவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com