வார்னருக்கு பதில் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமனம் - ஹைதராபாத் அணியில் மாற்றம்

வார்னருக்கு பதில் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமனம் - ஹைதராபாத் அணியில் மாற்றம்

வார்னருக்கு பதில் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமனம் - ஹைதராபாத் அணியில் மாற்றம்
Published on

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை கேப்டனாக இருந்த டேவிட் வார்னருக்கு பதிலாக கேன் வில்லியம்சனை நியமித்து ஹைதராபாத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது ஹைதராபாத் அணி. இதுவரை 6 போட்டிகளில் பங்கேற்று 1 வெற்றி மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணியின் இந்தத் தோல்வி குறித்து கடந்தப் போட்டியின்போது மிகவும் வருத்தப்பட்டு பேசியிருந்தார் டேவிட் வார்னர்.

இந்நிலையில் ஹைதராபாத் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் "ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பை இனி கேன் வில்லியம்சன் ஏற்பார். இனி எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கும் கேன் வில்லியம்சன் கேப்டனாக இருப்பார். இது நாளை நடைபெற இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து அமலுக்கு வருகிறது"

மேலும், "தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் - ஜானி பேர்ஸ்டோ ஜோடியும் நாளைய போட்டியில் மாற்றப்படும். கேப்டன்சி பொறுப்பை மாற்றுவது குறித்து நீண்ட ஆலோசனைக்கு பின்பு முடிவு மேற்கொள்ளப்பட்டது. டேவிட் வார்னர் காலம் காலமாக ஹைதராபாத் அணிக்கு சிறப்பான பங்கை அளித்து வருகிறார். இனி எஞ்சியிருக்கும் போட்டிகளில் வார்னர் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com